Search
Search

ஒரு சூப்பர் ஆக்ஷன் படம் ரெடி.. வெளியானது நாக சைதன்யாவின் கஸ்டடி பட ட்ரைலர்!

தெலுங்கு உலகில் மிகவும் பிரபலமான நடிகர் தான் நாக சைதன்யா, விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு இவர் நேரடியாக தமிழில் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தான் கஸ்டடி. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.

வருகிற மே 12ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் தெலுகு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

நாக சைதன்யா, கீர்த்தி செட்டி, அரவிந்த்சாமி மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், கடந்த சில நாட்களாகவே இந்த படம் குறித்த பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிவந்தது.

இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ள நாக சைதன்யா மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது, கூடுதல் சிறப்பாக தமிழில் வசனங்களை நாக சைதன்யாவே டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like