இதெல்லாம் “டூ மச்” : ட்ரெண்டிங்கில் கஸ்டடி பட டீஸர் – கிரியேட்டிவிட்டியாக வெளியான ஒரு போஸ்டர்
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரேசேர வெளியிடவுள்ள படம் தான் கஸ்டடி. இந்த படத்தில் பிரபல நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக களமிறங்க, அரவிந்த்சாமி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
நேற்று இந்த படத்தின் டீஸர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாக சைதன்யா இதுவரை நேரடியாக தமிழ் படங்களில் நடித்ததில்லை என்றபொழுதும் இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாக சைத்தன்யாவிற்கு பிரபல நடிகை சமந்தாவுடன் 2017ம் ஆண்டு திருமணமான நிலையில் நான்காண்டுகள் கழித்து 2021ம் ஆண்டு அவர்களுக்குள் விவாகரத்து நடந்தது. சைதன்யா பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் அமலா ஜோடியின் மகன்.
சைதன்யா ஜோஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் 2009ம் ஆண்டு அறிமுகமானார், ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா-வில் ஒரு சிறு வேடத்தில் நடித்ததற்கு பிறகு சுமார் 13 ஆண்டுகள் கழித்து தமிழில் இப்பொழுது அவர் நடிக்கின்றார்.
முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துவரும் சைதன்யாவிற்கு, இந்த கஸ்டடி திரைப்படம் தமிழில் ஒரு Breakthrough என்றே கூறலாம். இந்நிலையில் வெங்கட் பிரபுவின் நண்பர் ஒருவர் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வரும் கஸ்டடி படத்தின் டீஸர் போஸ்டரை சற்று மாற்றங்கள் செய்து வெளியிட, “இது வேற லெவல் கிரியேட்டிவிட்டி” என்று பாராட்டியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
