நடிகையை டேட்டிங் செய்யும் நாக சைதன்யா? – சமந்தா அளித்த நெத்தியடி பதில்!

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இரு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துகொண்டார்கள். யார் கண்பட்டதோ என்று ரசிகர்கள் கூற காலமும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக சில தகவல்கள் சுற்றிவர துவங்கியுள்ளது.
இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றபோதும் இதுகுறித்து மனம் திறந்துள்ளார் நடிகை சமந்தா. தனது சகுந்தலா படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் அவரிடம் இந்த கேள்வியை கேட்டபோதும் “யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பது பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை”.
“அன்பின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் அது வீணான ஒன்றுதான், குறைந்த பட்சம் அந்த பெண்ணாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். “தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணை மனதார காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அனைவருக்கும் நல்லது” என்றும் அவர் கூறினார்.