நவரசா விமர்சனம் : சித்தார்த் நடித்த இன்மை
சித்தார்த், பார்வதி இப்படத்தில் நடித்துள்ளனர். ரதீந்திரன் ஆர் பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். விஷால் பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வீரஜ் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பார்வதியின் கம்பெனியில் சித்தார்த் வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் வேலை விஷயமாக கையெழுத்து வாங்க பார்வதியின் வீட்டுக்கு செல்கிறார் சித்தார்த். அப்போது இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது பார்வதி இளம் வயதில் செய்த சில விஷயங்களை சித்தார்த் சொல்ல ஆரம்பிக்கிறார்.
இதை கேட்கும் பார்வதி அதிர்ச்சி அடைகிறார். இளம் வயதில் செய்த விஷயங்கள் சித்தார்த்துக்கு எப்படி தெரியும் என கண்டுபிடிக்க முயல்கிறார். அவரின் முயற்சி என்ன ஆனது? அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

சித்தார்த், பார்வதி இருவருமே இயல்பாக நடித்துள்ளனர். சிறு வயது பார்வதியாக வரும் அம்மு அபிராமியும் திறமையாக நடித்துள்ளார்.
‘பயம்’ என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படம் எடுக்கபட்டுள்ளது. 30 நிமிடக் கதையில் முழு நீளப் படத்துக்கு உண்டான சுவாரசியத்தைக் கொடுத்திருக்கிறார். பரத்வாஜின் பின்னணி இசையும் வீரஜ் சிங்கின் ஒளிப்பதிவுயும் கதையோடு பயணிக்கிறது.
