Search
Search

வாய்வு தொந்தரவு, செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தும் நவாசனம்

navasana yoga benefits

சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை நன்றாக இயங்க பல யோக பயிற்சிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நவாசனம். இதனை ஒரு நாற்காலியில் அமர்ந்தே செய்யலாம்.

navasana yoga benefits

படத்தில் உள்ளது போல நாற்காலியில், சற்று முன் அமர்ந்து இரு கால்களையும் நீட்டவும். பிறகு இரு கைகளினால் கால் முட்டு பக்கத்தில் பிடித்துக்கொள்ளவும். இப்படி பத்து வினாடிகள் முதல் இருபது வினாடிகள் இருக்கவும். பிறகு காலை மெதுவாக தரைக்கு கொண்டு வரவும்.

இதே போல் மூன்று தடவைகள் பயிற்சி செய்யவும். காலை, மாலை சாப்பிடும் முன் இரண்டு முறைகள் பயிலவும்.

இந்த பயிற்சி அடிவயிற்றுக்கான சிறந்த யோகா பயிற்சியாகும். வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

கணையங்களின் செயல்பாடு தூண்டப்படுவதால் நீரிழிவு நோயைத் தடுக்கும்.

குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த பயிற்சி பயன்படும்.

இந்த யோகா பயிற்சியை தினமும் செய்து வந்தால் வயிறு வீக்கம், வாய்வு தொந்தரவு, செரிமான பிரச்சனைகள், இரைப்பை, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

மலச்சிக்கல் மற்றும் அல்சர் நோயை குணப்படுத்தும்.

Leave a Reply

You May Also Like