நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்

இந்தியில் வந்த “பிங்க்” படத்தின் தமிழ் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித், ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய எச் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெண்களை மையப்படுத்திய குறிப்பாக பெண் உரிமைக்காக போராடும் ஒரு சாதாரண வழக்கறிஞராக தல அஜித் நடித்துள்ளார். ஷ்ரதா, அபிராமி, ஆண்ட்ரியா ஆகிய மூவரும் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் ஷ்ரதாவிடம் ஆண் நண்பர் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயல்கிறார். அப்போது ஷ்ரதா அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
இந்த சம்பவத்தால் அந்த பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அஜித் கவனித்து வருகிறார். பிறகு அந்த வழக்கை அஜித் கையில் எடுக்கிறார். பின் அந்த பெண்களுக்கு அஜித் எப்படி நிதி வாங்கி தந்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
அஜித் வழக்கம் போல் ஒன் மேன் ஷோ, அவர் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து ரீமேக் செய்ததற்கு பாராட்ட வார்த்தை இல்லை. ரங்கராஜ் பாண்டே அஜித்தை எதிர்த்து வாதாடும் வழக்கறிஞராக வருகிறார்.
ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும் இது ரீமேக் படம் என்ற எண்ணத்தை மறக்கடித்து விடுகிறார் இயக்குனர் எச் வினோத். படத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து வசனங்களால் மிக அழுத்தமாக கூறியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். அதேபோல் நீரோவ்ஷாவின் ஒளிப்பதிவு, கோர்ட் ரூமையே சுற்றினாலும் அலுப்பு தட்டவில்லை.
ஒரு பெண் வேண்டாம் என்றால் யாராக இருந்தாலும் தொடக்கூடாது என்ற கருத்தை முன்னிறுத்தி அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் வேற லெவல்.
மொத்தத்தில் நேர்கொண்ட பார்வை அனைவரும் பார்க்க வேண்டிய படம்.