Search
Search

தல அஜித் பட தயாரிப்பாளர் காலமானார்.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கவிப்பேரரசு!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஐயா S.S சக்கரவர்த்தி அவர்கள் இன்று ஏப்ரல் 29ம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருடைய நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் முதல் முதலில் 1997ம் ஆண்டு வெளியான தல அஜித் அவர்களுடைய ராசி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பு நிறுவனமாக தமிழ் சினிமாவில் களமிறங்கினர்.

அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி மற்றும் வரலாறு என்று சுமார் 9 முறை தல அஜித் அவர்களை வைத்து படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை சக்கரவர்த்தி இயக்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஐயா சக்கரவர்த்தி அவர்கள் கடந்த எட்டு மாதத்திற்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. கவிப்பேரரசு வைரமுத்து உட்பட பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வைரமுத்து அவர்களும் அவருக்காக ஒரு கவிதையை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

You May Also Like