நாளை வெளியாகும் “தி கேரளா ஸ்டோரி”.. படத்திற்கு தடைவிதிக்க மறுத்த நீதிமன்றம்!

“தி கேரளா ஸ்டோரி”, இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து மாபெரும் சர்ச்சை வெடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். கேரள பெண்கள் 32,000 பேரை ஏமாற்றி அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியதாகவும்.
மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து விட்டதாகவும், அவதூறு பரப்பும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற மாபெரும் குற்றச்சாட்டு இந்த படத்தின் மீது வைக்கப்பட்டது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார். மேலும் கேரளாவில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று “இந்த படத்தின் டைலரில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சம்பவங்களை நிரூபித்தால், நிரூபிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்தது.
இந்நிலையில் இந்த படம் நாளை மே 5 தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது. ஆகையால் இந்த திரைப்படம் நாளை கட்டாயமாக வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.
சுதிப்டோ சென் இயக்க, சன்ஷயின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வெளியிடுகிறது. A சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தில் சுமார் பத்து காட்சிகள் சென்சார் கட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.