உடலில் உள்ள கிருமிகளை விரட்டும் நொச்சி இலை

மலைப்பகுதியில் வளரும் மூலிகை இலைகளில் மிகச்சிறந்த மூலிகை நொச்சி என்று சொல்லலாம். நொச்சியில் வெண் நொச்சி, கரு நொச்சி, நீர் நொச்சி என மூன்று வகை உள்ளது. இதில் கரு நொச்சி சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நொச்சி செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என முழு தாவரத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

கருநொச்சிச் சாறு, கரிசாலைச் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சிற்றாமணக்கு எண்ணெய், பசு நெய் இவற்றை வகைக்கு 100 மில்லியும், நெருஞ்சில் விதை, மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை வகைக்கு 6 கிராமும் எடுத்து இடித்துக் கலந்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இதை மாதவிலக்கான 3 நாட்களும் 16 மில்லி அளவு குடித்து வர மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் உண்டாகும்.

Also Read : பிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்கள்

நொச்சிச்சாறு, கரிசாலைச்சாறு 500 மில்லி, சிற்றரத்தை, சுக்கு, ஆமணக்கு வேர், தேற்றாங்கொட்டை 15 கிராம் எடுத்து, வெள்ளாட்டுப் பாலால் அவற்றை அரைத்து சாறு பிழியவும். இந்தச் சாற்றைக் காய்ச்சி வடிகட்டி, இதைக் கொண்டு தலைக்குக் குளித்து வர பீனிசம் தீரும்.

நொச்சிக் கொழுந்து, வெற்றிலை, மிளகு இந்த மூன்றையும் ஒன்றிரண்டாக நசுக்கி நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க சுரம், தலைவலி குணமாகும்.

இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு 100 மில்லி யும், நொச்சிச்சாறு, பசும்பால் வகைக்கு 50 மில்லியும் எடுத்துக் காய்ச்சி வடித்து, அதைத் தலைக்கு தேய்த்துக் குளித்து வர தலைவலி, சைனஸ் எனப்படும் பினிச நோய் போன்றவை குணமாகும்.

நொச்சி இலையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்துச் சாப்பிட மலேரியா சுரம் தணியும். வயிறு வலி உப்புசம், நாக்குப்பூச்சி, வாத நோய்களும் குணமாகும்.

நொச்சி மலர்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ரத்த பேதி, ரத்த வாந்தி குணமாகும்.

கருநொச்சி இலைகளை தலையணை போல பரப்பி அதன்மேல் தலையை வைத்துப் படுத்துக்கொள்ள கழுத்துவலி, தலைவலி குணமாகும்.

ஜலதோஷம், மூக்கடைப்பு சைனஸ் தலைவலிக்கு நொச்சி இலை விரைவில் குணப்படுத்துகிறது. நொச்சி இலையை கசக்கி அதன் சாறை சுத்தமான வெள்ளைதுணியில் போட்டு அதை மூக்கில் முகர்ந்துவந்தாலும் மூக்கடைப்பு நீங்கும்.

நொச்சி இலை கொண்டு ஆவி பிடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். உடலில் இருக்கும் நச்சுக்கள் வியர்வை மூலம் வெளியேற்றும். மேலும் சுவாச பாதையை சுத்தப்படுத்தும்.

நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து கட்டி களின் மீது பூசி வர கட்டி கரையும், வீக்கம் குறையும்.

Recent Post