“சிரிச்சா போச்சு” – வடகொரியாவில் சிரிப்பதற்கு தடை !

வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் ஜாங் II இன் பத்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு வடகொரியாவில் உள்ள பொதுமக்கள் அடுத்த 10 நாட்களை துக்கக் காலமாக அனுசரித்து, மது அருந்தவோ, சிரிக்கவோ அல்லது ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

1994 முதல் 2011 இல் அவர் இறக்கும் வரை வடகொரியாவை ஆண்ட கிம் ஜாங் II இன் மரணத்தை நினைவுகூரும் வகையில் அரசாங்க அதிகாரிகளால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர் கிம் ஜாங் II இன் மறைவுக்குப் பிறகு, தற்போதைய தலைவராக இருக்கும் கிம் ஜாங் உன், அவரது மூன்றாவது மற்றும் இளைய மகன், தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதுமட்டுமல்லாமல், கிம் ஜாங் இல்லின் நினைவு தினமான டிசம்பர் 17 அன்று மக்கள் மளிகைக் கடைகளுக்குச் செல்ல அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.