Search
Search

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஓட்ஸ்

ஓட்ஸ் சர்வதேச அளவில் பெரும்பாலானோரால், விரும்பி சாப்பிடப்படும் உணவாக இருந்து வருகிறது. கோதுமை போன்று ஓட்ஸ் முழு தானியமாக இருந்து வருகிறது. பால் அல்லது தண்ணீரில் ஓட்ஸ் தானியத்தை சேர்த்தால் சுவையான ஓட்ஸ் உணவு தயாராகிவிடும்.

100 கிராம் ஓட்ஸில், 389 கலோரிகள் உள்ளது. மேலும் தையமின், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலீனியம் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. உடலுக்கு தேவையான நார்ச்சத்து கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ மற்றும் புரதங்கள் ஒரு கோப்பை ஓட்ஸ் உணவில் உள்ளது.

oats benefits for weight loss

ஓட்ஸில் உள்ள துத்தநாகம் மற்றும் செலீனியம், உடலில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

ஓட்ஸ் உணவை தினமும் சாப்பிட்டுவந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் ஓட்ஸை அதிகளவில் தங்களது உணவில் சேர்த்துக்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸ் உணவை தொடர்ந்து உண்பதால் தமனிகள், ரத்த நரம்புகளில் உள்ள கழிவுகளை அகற்றி, உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு வருவதால் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும். உடல் எடை அதிகரிப்பு தடுக்கப்படும்.

You May Also Like