Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

செரிமான கோளாறுகளை நீக்கி பசியை தூண்டும் ஓமம்

மருத்துவ குறிப்புகள்

செரிமான கோளாறுகளை நீக்கி பசியை தூண்டும் ஓமம்

ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், நியாசின் ஆகிய சத்துக்கள் இருக்கிறது.

ஓமத்தை கஷாயம் வைத்து குடித்து வந்தால் சாப்பிட்ட உணவுகள் நன்றாக ஜீரணமாகி விடும். இதனால் நல்ல தூக்கமும் நல்ல பசியும் ஏற்படும்.

சிலருக்கு அடிக்கடி வாயு தொந்தரவு ஏற்படும். அந்த பிரச்சனையை சரிசெய்ய ஓமம், கடுக்காய் பொடி. சுக்கு மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி பொடியை கலந்து குடித்து வந்தால் வாயு தொல்லை முற்றிலும் குணமாகும்.

ஓமத்தை சிறிய அளவிலான துணியில் கட்டி அதனை நுகர்ந்து வந்தால் சளி, மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்வது போன்ற பழக்கங்களால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படும். இதனால் தொண்டை மற்றும் நெஞ்சு பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஓமத்தை கஷாயம் செய்து குடிக்கலாம்.

நன்றாக பசி எடுக்க வேண்டுமா…இதை சாப்பிடுங்க

குழந்தைகள் சாப்பிடாமல் அடம்பிடித்தால் அவர்களுக்கு தினமும் 20 மில்லி அளவு ஓமத்தை கால் டம்ளர் நீரில் கலந்து கொடுத்து வாருங்கள். தொடந்து 7 நாட்கள் கொடுத்தால் குழந்தைகளுக்கு பசியின்மை நீங்கி செரிமான மண்டலம் சீராக வேலை செய்யும். பிறகு நன்றாக சாப்பிட தொடங்குவார்கள்.

மூச்சு இரைப்பு இருப்பவர்கள் தினமும் காலை வேளையில் ஓமத்தை வறுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி இனிப்புக்கு தேன் அல்லது கருப்பட்டி கலந்து குடித்துவந்தால் உடலுக்கு பலம் கிடைக்கும்.

ஓமம், அருகம்புல் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட புண்கள் ஆறும்.

ஓமத்தை ஆடாதொடை இலையுடன் சேர்த்து அரைத்து பாத்து கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகும்.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top