படையப்பாவை மிரட்டிய நீலாம்பரி.. அந்த கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட இரு நடிகைகள் யார் தெரியுமா?

ஆண்டுகள் 24 கடந்துவிட்டது, ஆனாலும் இன்றளவும் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தை கொண்டு தான் அழைக்கப்படுகிறார் நடிகை ரம்யா கிருஷ்னன். பிரபல அரசியல் விமர்சகரும், நடிகருமான சோ ராமசாமி அவர்களின் உறவினர் தான் இவர்.
பல இந்திய மொழிகளில் நடித்து வரும் ரம்யா, 1983ம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் களமிறங்கினார். ஆக சுமார் 40 ஆண்டுகளாக அவர் ஒரு சிறந்த நடிகையாக இந்த சினிமா உலகில் வலம்வருகின்றார். அன்று தொடங்கி இன்று வரை எத்தனையோ கதாபாத்திரங்கள் அவர் ஏற்று நடித்துவிட்டார்.
ஆனால் படையப்பா படத்தில் அவர் தோன்றிய நீலாம்பரி கதாபாத்திரம் தான் இன்றளவும் அவருக்கு ஒரு மகுடமாக இருக்கின்றது. ஆனால் படையப்பா படத்தில் முதன் முதலில் ரம்யா கிருஷ்னன் தேர்வு செய்யப்படவில்லையாம்.
ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அந்த படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசும்போது. முதலில் நான் இந்த படத்திற்காக மீனாவை தான் அணுகினேன், ஆனால் அவர் தன்னால் அவருக்கு எதிராக நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
பிறகு நக்மாவிடம் கேட்க அவரும் அப்போது வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அவரும் மறுத்துள்ளார். இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். உண்மையில் அவர் நடிக்காமல் வேறு யாரும் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் இவ்வளவு புகழ்பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.