Search
Search

பிரதமர் வருகையை முன்னிட்டு மருத்துவமனைக்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் தொடங்கியது..!

சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

அந்த தொங்கு பாலத்தில் நேற்று பொதுமக்கள் சென்ற போது எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 140க்கும் அதிமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “என் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை நான் எப்போதும் கடந்ததில்லை. ஒருபுறம் என் இதயம் வலியில் கனக்கிறது. இன்னொரு புறம் கடமையின் பாதை என்னை அழைக்கிறது. என அவர் பேசினார்.

இந்நிலையில் பிரதமர் வருகையை முன்னிட்டு மோர்பி சிவில் மருத்துவமனைக்கு இரவோடு இரவாக பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்களையும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை அளிப்பதற்கோ, காணாமல் போனவர்களை தேடுவதற்கோ துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் மருத்துவமனைக்கு வெள்ளை அடிப்பது இப்போது மிகவும் அவசரமா? இது தான் குஜராத் மாடலா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

You May Also Like