Search
Search

தயிர் வாங்குவதற்காக ரயிலை நடுவழியில் நிறுத்தி சென்ற ஓட்டுநர்

பாகிஸ்தான் நாட்டில் தயிர் வாங்குவதற்காக பொறுப்பில்லாமல் ரயிலை நடுவழியில் நிறுத்தி சென்ற ஓட்டுநர் மீது பாகிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சியை நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்தது.

ரயிலை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென நடுவழியில் ரயிலை நிறுத்தி உள்ளார். இதனால் குழப்பம் அடைந்த பயணிகள் வெளியே எட்டிப் பார்த்து உள்ளனர். அப்போது ரயிலை ஓட்டி சென்ற நபர் ரயிலிலிருந்து இறங்கி அருகிலிருந்த கடையில் தயிர் வாங்கியுள்ளார். இந்த காட்சியை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த வீடியோ அந்நாட்டு ரயில்வே அமைச்சர் பார்வைக்கு சென்றது. அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு டீ சாப்பிட சென்றது போல ரயிலை நிறுத்திவிட்டு ஓட்டுனர் நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You May Also Like