உங்களுக்கு பழைய சோறு பிடிக்குமா? அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்..

பழைய சாதத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளது.

பழைய சாதம் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை குறைக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். அதோடு இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை சாப்பிடும்போது உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். முதல் நாள் இரவில் சோற்றில் தண்ணீரை ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. இதில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியா (Lactic Acid Bacteria) புளிப்பு சுவையை தருகிறது. அதை மறுநாள் காலையில் சாப்பிடும்போது உடல் உஷ்ணத்தைத் தணித்து, குடல் புண் மற்றும் வயிற்று பிரச்சினைகளை தடுக்கிறது.

நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல. இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம்.

ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும். பழைய சோற்றை, ஏறு வெயிலில் அதாவது மதியம் வரை மட்டுமே சாப்பிடுவது சாலச் சிறந்தது. இறங்கு வெயில் எனப்படும் மாலை நேரங்களில் உண்ணக்கூடாது.

பழைய சாதத்தோடு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் மிளகாய்த் துவையல் மீன் குழம்பு இவைகளோடு சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும்.