மாத்திரைகளால் சரி செய்ய முடியாத பிரச்சினைகளை சரி செய்யும் பப்பாளி இலை

பப்பாளி பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. பப்பாளி சருமத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. இதுமட்டுமின்றி பப்பாளி இலையிலும் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.

மாத்திரைகளால் சரி செய்ய முடியாத பிரச்சினைகளை பப்பாளி இலை சரி செய்து விடுகிறது. குறிப்பாக டெங்கு, டைபாய்டு போன்ற நோய்களுக்கு பப்பாளி இலை சாறு பயன்படுகிறது.

பப்பாளி இலையில் சாறு எடுத்து தலை முடியின் வேரில் படும்படி தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி சீராக இருக்கும். பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் பப்பாளி இலையில் இருப்பதால் பொடுகுத் தொல்லை வராமல் பாதுகாக்கும்.

பருவநிலை மாறும்போது டெங்கு, மலேரியா, டைபாய்டு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இந்த நோய்களை குணப்படுத்த பப்பாளி இலை முக்கிய பங்கு வகிக்கிறது.

பப்பாளி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்கப்படுகிறது.

பப்பாளி இலையில் நார்சத்து இருப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது. வாயுத் தொல்லை, வயிறு மந்தம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு பப்பாளி இலை சிறந்த மருந்து.

பப்பாளி இலையை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம் என கூறப்படுகிறது.

பப்பாளி இலையை நல்ல சுத்தமான நீரில் அலசி அதில் இருந்து சாறு எடுக்க வேண்டும். காய்ச்சல் போன்ற நோய் ஏற்பட்ட காலங்களில் ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் சாறு பருகவேண்டும்.

பப்பாளி இலைச்சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து எந்த நோயும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

Recent Post