வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். மாம்பழத்திற்கு அடுத்தபடியாக வைட்டமின் A உயிர்சத்து நிறைந்த பழம் பப்பாளிதான்.
சாப்பாட்டிற்கு பின்பு பப்பாளியை சாப்பிட்டால் தேவையற்ற சதைகள் குறையும். பப்பாளியில் சுரக்கும் பாலினை காயங்கள் உள்ள இடங்களில் பூசினால் காயம் விரைவில் குணமடையும்.
மனித உடல் வளர்ச்சிக்காகவும், பலத்திற்க்காகவும், ரத்தத்தை விருத்தி செய்யவும், நரம்புகளுக்கு உறுதியை கொடுக்கவும் பயன்படுகிறது.மேலும் கண்பார்வை கூர்மை படுத்தவும், வயிற்றிலுள்ள கரு பலத்துடன் வளர்வதற்க்காகவும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பயன்படுகிறது.
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.
தினசரி பப்பாளிப் பழத்தை குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டு வந்தால் உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். மலசிக்கல ஏற்படாது. பல் சம்பந்தமான பிரச்சனைகள் குணமடையும்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
பப்பாளி இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும். பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் பரவாமல் தடுக்கிறது. எனவே பப்பாளி பழம் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.