மறுபடியும் ரீமேக்கா..தமிழ் சினிமாவுக்கு வந்த அடுத்த சோதனை..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படம், தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

ஏற்கனவே தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பல்வேறு படங்களை, ரீமேக் செய்கிறேன் என்ற பெயரில், பாலிவுட் திரையுலகினர் நாசம் செய்து வருகிறார்கள். உதாரணமாக கைதி, வீரம் உள்ளிட்ட படங்கள் ரீமேக் என்ற பெயரில் சொதப்பிவிட்டனர்.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதால் இதையும் சொதப்பி விட வேண்டாம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.