Search
Search

பரோல் திரைவிமர்சனம்

parole movie review in tamil

லிங்கா, ஆர் எஸ் கார்த்திக், கல்பிகா, மோனிஷா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பரோல்.

‘காதல் கசக்குதையா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் துவாரக் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

வடசென்னையில் சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் ஜானகி சுரேஷ். இவருக்கு லிங்கா, கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் லிங்கா சிறு வயதிலேயே சில கொலைகளை செய்து விட்டு சிறையில் இருக்கிறார்.

இரண்டாவது மகன் கார்த்திக் பிளம்பிங் வேலைகளை செய்து வருகிறார். தனது மகன் லிங்காவிற்காக கருணை மனு கொடுக்க நினைக்கும் அம்மா ஜானகி திடீரென இறந்து போகிறார்.

அம்மாவின் இறுதிச் சடங்கு செய்வதற்காக கார்த்திக் லிங்காவை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறார். அதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இறுதியில் என்ன நடத்து என்பதே படத்தின் கதை.

parole movie review in tamil

கார்த்தி – லிங்கா இருவருமே கதைக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள். இவர்களின் தாயாக நடித்துள்ள நடிகை ஜானகி சுரேஷ் படத்தை தாங்கி நிற்கிறார். வக்கீலாக நடித்துள்ள நடிகை வினோதினி வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்சுக்கு முன்பாக வரை கொலை, ரத்தம், கெட்ட வார்த்தைகள் என கரடு முரடான பாதையில் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

லிங்கா, கார்த்திக் ஆகியோரின் காதலிகளாக கல்பிக்கா, மோனிஷா முரளி இருவருக்கும் அதிகக் காட்சிகள் இல்லை.

ராஜ் குமார் அமலின் பின்னணி இசை திரைக்கதை தொய்வு இல்லாமல் நகர உதவுகிறது. மகேஷின் ஒளிப்பதிவு ஓகே.

திரைக்கதையை வடிவமைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஆனால், இன்னும் கொஞ்சம் புரியும்படி அமைத்திருக்கலாம்.

You May Also Like