இதவிட வேறென்ன வேணும்.. பட்டாசாக வெடிக்கும் பத்து தல – “தயாரிப்பாளர்” கொடுத்த ரிப்போர்ட்

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் பத்து தல. கடந்த மார்ச் 30ம் தேதி உலக அளவில் வெளியானது. சிலம்பரசனின் இந்த திரைப்படம் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் காலெக்ஷனாக சுமார் 55 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் பிரபல தயாரிப்பாளரும், BOFTA நிறுவன உரிமையாளருமான தனஞ்செயன் அவர்கள் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சிம்புவின் திரைப்பட வரலாற்றில் பத்து தலை திரைப்படம் தான் அதிக அளவிலான வசூலை பெற்று தந்த திரைப்படம் என்று கூறியுள்ளார்.
மேலும் ஸ்டுடியோ கிரீன் இதுவரை தயாரித்து வெளியிட்ட படங்களில் பத்து தல திரைப்படம் தான் அதிக வசூலை பெற்று தந்த திரைப்படம் என்றும் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார் அவர். சிம்புவிற்கு இது ஒரு சிறந்த Come Back என்றே கூறலாம்.
இந்நிலையில் அவர் அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.