Search
Search

பேன் தொல்லையை இயற்கை முறையில் எப்படி சரி செய்வது?

pen thollai neenga tips

முடி வளர்ச்சி அதிகம் உள்ளவர்களுக்கும் கூந்தலை சரியாக பராமரிக்காதவர்களுக்கும் பேன் அதிகம் வரும் வாய்ப்புகள் உள்ளது. தலைமுடியில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை இருந்தால் பேன் தொல்லை கண்டிப்பாக வரும்.

ஒருவர் பயன்படுத்திய டவல், சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்தினாலும் அதன் வழியாக நமது முடிகளுக்குள் பேன் நுழைந்து கொள்ளும். மேலும் ஒரே தலையணையில் அருகருகே தலை வைத்துப் படுப்பது போன்ற காரணங்களால் பேன் தொல்லை ஆரம்பிக்கிறது.

pen thollai poga tips in tamil

இந்த பேன் தொல்லையை இயற்கை முறையில் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.

வெங்காயச் சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவி பாத் கேப் மூலம் கவர் செய்ய வேண்டும். பிறகு முடியினை அலசும்போது பேன் தானாக வெளியேறிவிடும்.

வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்களுக்கு தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை மற்றும் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு ஆகியவை நீங்கும்.

வேப்பிலையை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அலசினால் பேன் நீங்கிவிடும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி செய்யலாம்.

குப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பொடுகுத் தொல்லை, பேன் தொல்லை நீங்கும்.

You May Also Like