Search
Search

‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே‘ விமர்சனம்

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே.’ சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல் இதில் நடித்துள்ளார். மேலும் ஸ்வேதா பண்டிட், மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

pen vilai verum 999 rubai mattume movie review in tamil

ப்ளே பாயாக சுற்றி திரியும் ராஜ்கமல் சமூக ஊடகங்களில் பெண்களுடன் நட்பாக பழகுகிறார். பிறகு அவர்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டி பணம் சம்பாதிக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதன் பிறகு போலீஸ் விசாரணை ஆரம்பமாகிறது. இந்த விஷயம் கதாநாயகி ஸ்வேதாவுக்கு தெரிய வருகிறது. தனது காதலனை விட்டு பிரிய நினைக்கிறார். ஆனால் ராஜ்கமல் தான் உண்மையாக காதலிப்பதாகவும் சேர்ந்த வாழ விரும்புவதாகவும் சொல்கிறார்.

இந்நிலையில் ராஜ்கமலை பிடிக்க போலீஸ் வந்து விடுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

ராஜ்கமல் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் இந்த படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா பண்டிட் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கும்பலிடமிருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? என்பதை இந்த படத்தின் மூலம் சொல்லி உள்ளார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு நன்மை தருகிறதோ, அதே அளவிற்கு ஆபத்தும் உள்ளது என்பதை இந்தப்படம் எச்சரித்திருக்கிறது. ஓட்டல் அறைகளில் இலவசமாக வழங்கப்படும் வைபை சேவையால் எப்படிப்பட்ட ஆபத்துகள் இருக்கிறது, என்பதை இயக்குநர் காட்டிய விதம் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும், விவேக் சக்கரவர்த்தியின் பின்னணி இசையும் நன்றாக உள்ளது. படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் படத்தின் கதையையும் இயக்குனரையும் பாராட்டலாம்.

Leave a Reply

You May Also Like