Search
Search

உங்களுடைய கனவில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

உங்களுடைய கனவில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் என்பதை இதில் பார்ப்போம்.

சுமங்கலிப் பெண் உங்கள் வீட்டிற்கு வருவது போல் கனவு வந்தால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

சிவப்பு நிற புடவையில் பெண் கனவில் வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கும்.

கர்ப்பமாக இருக்கும் பெண் கனவில் வந்தால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கும்.

பெண்ணுக்கு நகையை பரிசளிப்பது போல கனவு வந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படலாம்.

ஒரு பெண் நடனம் ஆடுவது போல கனவு வந்தால் திருமண உறவு அல்லது காதலில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு.

கன்னிப்பெண்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும்.

வெள்ளை உடை அணிந்த பெண்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

விதவைப் பெண் உங்கள் வீட்டுக்குள் வருவது போல கனவு வந்தால் நீங்கள் திட்டமிட்ட பெரிய செயல் சிறப்பாக நடக்கும்.

நீளமான கூந்தலை கொண்ட பெண்ணை நீங்கள் கனவில் கண்டால் பெண்களால் உங்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும்.

அழகான பெண்ணை கனவில் கண்டால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆடையில்லாத பெண்ணை கனவில் கண்டால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும்.

Leave a Reply

You May Also Like