Search
Search

கெட்ட கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பிஸ்தா

health benefits of pista nuts

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது. அந்த வகையில் பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

பிஸ்தாவில், நல்ல கொழுப்புகள் மற்றும் ஃபைபர், மெக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. மற்ற பருப்பு வகைகளை விட பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவே உள்ளது. கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பிஸ்தாவில் உள்ளது.

health benefits of pista nuts

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சரி செய்து மலச்சிக்கல் பிரச்சனை வரவிடாமல் தடுக்கும்.

தினமும் மாலையில் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தமாக்கும்.

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்களுக்கு தெளிவான பார்வையை தரும். மேலும் கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

பிஸ்தா பருப்பு உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதால் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. பிஸ்தாவில் மெக்னீசியம் மற்றும் அர்ஜினைனின் அளவு அதிகமாக இருப்பதால் இதய தமனிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

You May Also Like