உ.பி யில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு வினியோகம் – அதிர்ச்சி வீடியோ

உத்தர பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூரில், கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு, கழிவறையில் இருந்து உணவு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.அங்கிருந்து வீரர்கள் தட்டுகளில் உணவுகளை எடுத்துச் செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சஹாரன்பூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக மாநில அரசும் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில், ஆளும் பாஜக அரசை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
यूपी की कबड्डी खेलने वाली बेटियों को टॉयलेट में खाना परोसा गया।
— Congress (@INCIndia) September 20, 2022
झूठे प्रचार पर करोड़ों खर्च करने वाली BJP सरकार के पास हमारे खिलाड़ियों के लिए अच्छी व्यवस्था करने के पैसे नहीं हैं।
धिक्कार है! pic.twitter.com/UazJvCrWPB