Search
Search

தலைமுடி உதிர்வை தடுக்கும் பிளம்ஸ் பழம்

Plums fruit uses in Tamil

இயற்கையில் இருந்து கிடைக்க கூடிய அனைத்தும் பழங்களும் சத்தான பழங்கள் தான். சில பழங்கள் சமைத்து சாப்பிடுவோம். சில பழங்களை அப்படியே சாப்பிடுவோம். அந்த வகையில் ஒன்று தான் பிளம்ஸ். இது பல வகையான சத்துக்களை பெற்றிருக்கிறது, அதனை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

Plums fruit uses in Tamil

பதட்டத்தை குறைக்கிறது

பிளம்ஸ் பழங்களில் மூளை செல்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் இறுக்கம், அழுத்தம் போன்றவற்றை குறைத்து மனதில் ஏற்படும் வீணான பதட்டத்தை குறைக்கிறது.

எலும்பை பாதுகாக்கும்

சிலருக்கு எலும்புகள் தேய்மானம் அடைவது ஒரு ஜீன் நோயாக இருந்து வருகிறது. இன்னொன்று மாதவிலக்கு முற்றிலும் நின்ற ஐம்பது வயது பெண்களுக்கு எலும்பு தேய்மானம் அடைவது வழக்கம். பிளம்ஸ் பழத்தில் பிளவினாய்ட்ஸ் எனும் வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது. அதனால் இப்பழத்தை சாப்பிட்டால் மேலே குறிப்பிட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.

சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குகிறது

பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து நமது உடலை அரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது. மேலும் ரத்ததில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல வகையான உணவுகளை உண்ணும் போது அதனோடு பிளம்ஸ் சேர்த்து சாப்பிட்டால், உடலில் கொழுப்புகள் சேராமல் எடையை கட்டுக்கோப்புடன் வைக்க உதவுகிறது.

தலைமுடி உதிர்வை தடுக்கிறது

இந்த பழங்களில் உள்ள சத்துக்கள் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக உள்ளதால் முடி கொட்டுவதை தடுக்கிறது. மேலும் இளம் வயதில் நரை முடி பிரச்சனையை போக்குகிறது.

சிறுநீரகத்தை பாதுகாக்கும்

தோலில் ஏற்படும் காயங்கள், தழும்புகள் ஆகியவை குணமாக தினமும் ஒரு பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் அடிக்கடி பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை நீங்கி சிறுநீரக வேலைகள் சீராக்கி நச்சுகள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் இப்பழத்தில் உள்ள போலிக் அமிலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியத்தை தருகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.

செரிமானம் அதிகரிக்கும்

நார்ச் சத்து தான் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் செரிமானம் செய்ய உதவுகிறது. பிளம்ஸ் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்பு பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் செயலாற்றுகிறது.

இப்பழத்தில் மெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான செயலாற்றலுக்கு உறுதுணையாக இருக்கிறது.

நம் சாப்பிடும் பல வகையான பழங்களில் ஒவ்வொரு சத்துக்கள் கொண்டிருக்கும், ஆனால் பிளம்ஸ் மட்டுமே இப்படிப்பட்ட தனித்துவமான நமக்கு நன்மை தரக்கூடிய அனைத்தையும் பெற்றிருக்கும்.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.

You May Also Like