பொன்மகள் வந்தாள் – திரை விமர்சனம்
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பிரதாப் போத்தன், பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’.
இந்த படம் OTT தளத்தில் வெளியானது. அதை பார்த்த சினிமா பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் பொன்மகள் வந்தாள் படத்தின் கதை.
ஊட்டியில் தொடர்ச்சியாக 5 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதோடு 2 இளைஞர்களும் கொலை செய்யப்படுகின்றனர்.
குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
பிறகு குற்றவாளியை பிடிக்கும் போது நடந்த துப்பாக்கி சூட்டில் அந்த குற்றவாளி இறந்துவிட்டதாக போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் மீது மர்மத்தை தூசி தட்டி கையில் எடுக்கிறார் வெண்பா என்கிற ஜோதிகா. ஒரு கொலைகாரிக்காக வாதடுவதா என ஊர் மக்கள் ஜோதிகா மீது கடும் எதிர்ப்பை காட்டுகின்றனர். எல்லாவற்றையும் தாண்டி அவர் இந்த வழக்கை கையில் எடுக்க காரணம் என்ன? உண்மை குற்றவாளி யார்? அந்த வழக்கில் உள்ள மர்மம் விலகியதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
வடநாட்டுப் பெண், வடநாட்டு இளைஞர் என்றாலே தீயவர், கடத்தல்காரர், கொலைகாரர் என்ற பார்வையுடன் அணுக வேண்டாம். என்ற அறிவுரைகள் சொல்லப்படுகிறது.
“ஒருத்தரோட அடையாளத்தைச் சிதைக்குறதுதான் இருக்குறதுலேயே மிகப்பெரிய வன்முறை” போன்ற அனல் பறக்கும் வசனங்களும் இடம்பெற்றுள்ளது.
வென்பா என்ற கதாபாத்திரத்தில் வக்கீலாகவே வாழ்ந்துள்ளார் ஜோதிகா.

பார்த்திபன், பிரதாப் போத்தன், பாக்யராஜ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரோட்டத்தை கொடுக்கிறது.
மொத்தத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற திரைப்படம்.
