வாருங்கள் பூ.. ஷூட்டிங் நேரத்தில் அரட்டை அடித்த வானதி, பூங்குழலி – வைரல் வீடியோ உள்ளே!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி பெரிய அளவில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் முதல் நாளில் அதிக அளவில் வசூலை குவித்த படங்களில் முதல் மூன்று இடங்களில், பொன்னின் செல்வன் திரைப்படமும் ஒரு இடத்தை பிடித்துள்ளது.
மேலும் அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் போன்ற மேலை நாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு சிறப்பு பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் திரையிடலில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் கலந்து கொண்டார்.
மேலும் இந்த சிறப்பு திரையிடலில் பொன்னின் செல்வன் படத்தில் நடித்த அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா ஆகிய இருவரும் இணைந்து பல்வேறு போஸ்களை கொடுத்து நடனமாடிய வீடியோ தான் அது. வாருங்கள் பூ என்று வானதி அழைக்க இருவரும் லூட்டி அடித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.