Search
Search

சக்தி வாய்ந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் : ஆளுநர் புகழாரம்

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் 34 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என் ரவி பட்டங்களை வழங்கினார்.

நடப்பாண்டில் 12,814 மாணவர்கள் பட்டப் படிப்புகளை முடித்துள்ளனர். அவர்களில் 63 சதவீதம் பேர் பெண்கள். சிறப்பிடம் பெற்ற 129 மாணவர்களுக்கு விழாவில் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி ‘சக்தி வாய்ந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களே’… என பேச தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது கொரோனா காலகட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பங்கு அளப்பரியது. தடுப்பூசியைக் கண்டறிவதில் அதீத முயற்சியை முன்னெடுத்த பல்கலைக்கழகத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலத்தில் நோய் பரவலை தமிழக அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது. சுகாதாரத் துறையை பொருத்தவரை தேசிய அளவில் தமிழகம் முதன்மையான இடத்தில் இருப்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

தன்னலமற்ற சேவை செய்யக்கூடிய மருத்துவர்களை கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் நினைக்கின்றனர். அத்தகைய முக்கியம் வாய்ந்த மருத்துவத்தை வணிக மயமாக்குவது என்பது நேர்மைக்கு எதிரான ஒன்று. பாரம்பரிய மருத்துவத்தை ஒதுக்கி விடாமல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என ஆளுநர் பேசினார்.

Leave a Reply

You May Also Like