மெய்சிலிர்க்க வைக்கும் பிரமாண்டம்.. வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் பட ட்ரைலர்!

இயக்குநர் ஓம் ரவுட் இயக்கத்தில் அஜய் என்பவருடைய இசையமைப்பில் தற்பொழுது உருவாகி உள்ள மாபெரும் பட்ஜெட் திரைப்படம் தான் அதிபுருஷ். பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் இந்த திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க, ராவணன் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார். சீதையாக கிரீட்டி சனோன் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியான பொழுது கிராபிக்ஸ் பணிகள் சரியாக செய்யவில்லை என்றும், இவ்வளவு பெரிய பட்ஜெட் திரைப்படத்தை ஏன் இப்படி செய்தீர்கள் என்றும் ரசிகர்கள் பல கேள்விகளை முன் வைத்தனர்.
அப்போது பிரபாஸ் அவர்களுக்கும் கோபத்துடன் இயக்குநரனை தன் அறைக்கு அழைத்து பேசியது குறிப்பிடத்தக்கது. அதனால் மீண்டும் 7 மாத உழைப்பிற்கு பிறகு இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
உண்மையில் மெய்சிலிர்க்கும் வண்ணம் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும், கிராபிக்ஸ் காட்சிகள் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.