ஆயிரம் கோடி செலவில் ப்ராஜெக்ட் K.. எப்படி உருவாக போகிறது? – வெளியான காணொளி!

அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் திஷா பட்டாணி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து நடிக்க, இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் எடுக்கப்படாத அளவில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ள திரைப்படம் தான் ப்ராஜெக்ட் K.
இன்னும் இந்த படத்திற்கு பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கியுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நமது சந்தோஷ் நாராயணன்.
கடந்த 2018ம் ஆண்டு இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது, முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த திரைப்படமாக (Science-Fiction) இது இருக்கும் என்று நம்பப்படுகிறது. முதலில் 27 மே 2023ல் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் இதற்கான படப்பிடிப்பு பணிகளும் தயாரிப்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று இந்த படம் வெளியாகும் என்று அண்மையில் சில தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த படம் கிராபிக் மூலமாக எந்த வகையில் உருவாகி வருகிறது என்பதற்கான ஒரு காணொளியை தற்பொழுது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.