புடலங்காய் சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

புடலங்காயில் நன்கு முற்றியக் காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர வளர்ச்சி உள்ள காயையே பயன்படுத்த வேண்டும், புடலங்காய் மிகுந்த மருத்துவக் குணம் கொண்ட காய்களில் ஒன்று. புடலங்காயை பொறியல் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.நினைவாற்றல் அதிகரிக்கும்.

புடலங்காயில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். புடலங்காயுடன் பச்சை பயிறு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூல நோயின் தாக்கம் குறைந்து விடும்.

புடலங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். உடல் எடை கூடாமல் இருக்க விரும்புவார்கள் இதை சாப்பிடலாம்.

Advertisement

புடலங்கொடியின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் கொத்தமல்லி சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து 3 வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.

புடலை இலையின் சாற்றை இரண்டு தேக்கரண்டி வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய கோளாறுகள் நீங்கும். மூல நோய் உள்ளவர்களுக்குப் புடலங்காய் நல்ல மருந்து. நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

புடலையின் வேரை எடுத்து நைசாக அரைத்து வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். குடல் புண்ணை ஆற்றும், வயிற்றுப் புண், தொண்டைப் புண் உள்ளவர்கள் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.

இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.