புளிச்ச கீரையின் மருத்துவ நன்மைகள்

பெயருக்கு தகுந்தாற்போல் மிக அதிக புளிப்பு சுவையுடையது. இந்த கீரையை ஆந்திராவில் ‘கோங்குரா’ என அழைக்கிறார்கள்.

புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் தாதுபொருட்களும் உள்ளன.

சிறுகீரை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும். புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

புளிச்ச கீரையின் மொட்டுக்களை பயன்படுத்தி வாய் கசப்பு, வாந்திக்கான மருந்து தயாரிக்கலாம்.

இந்த கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • வயிற்று நோய்கள் குணமாகும்.
  • ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
  • ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
  • சருமப் பாதுகாப்புக்கு நல்லது.
  • கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
  • சொறி, சிரங்கு நோய்கள் குணமாகும்.
  • பித்தத்தை தனிக்கும்
  • உடல் வெப்பத்தை குறைக்கும்.
  • எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது.

இது போன்று மருத்துவம், அனைத்து கீரைவகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Recent Post