Search
Search

என்னாங்க லிஸ்ட் போயிட்டே இருக்கு.. லோகேஷின் கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்?

சென்னை அன்னை ஈன்றெடுத்த பல முத்தான கலைஞர்களில் ராகவா லாரன்ஸ் அவர்களும் ஒருவர். சிறு வயது முதலிலேயே சின்ன சின்ன வேடங்களில் அப்பொழுது நடித்து மற்றும் டான்ஸ் ஆட தொடங்கி இன்று மாபெரும் நடிகராக உருவெடுத்துள்ளார்.

பாலச்சந்தர் அவருடைய இயக்கத்தில் உருவான பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தில் அழகு என்ற கதாபாத்திரத்தில் தோன்றி பலரின் கவனத்தை ஈர்த்தார். அதற்கு முன்பே அவர் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2002ம் ஆண்டு அற்புதன் என்று இயக்குனர் இயக்கி வெளியிட்ட அற்புதம் என்ற திரைப்படத்தில் நாயகனாக தோன்றினார். சுமார் 21 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் நல்ல பல படங்களில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

குறிப்பாக இந்த 2023ம் ஆண்டு வெளியாகவுள்ள சந்திரமுகி 2, துர்கா மற்றும் ஜிகர்தண்டா டுப்லெக்ஸ் போன்ற வெறித்தனமான காத்திருப்புகளை கொடுத்துள்ள படங்களில் அவர் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உழைப்பாளி இல்லாத நாடுதான் என்ற பாடல் தான் இவர் முதல் முதலில் குரூப் டான்ஸ் ஆக அறிமுக பாடல்.

தமிழில் இவர் இயக்கி, எழுதி, நடித்து வெளியான முதல் திரைப்படம் முனி, இந்நிலையில் லோகேஷ் அவர்களுடைய கதை மற்றும் திரைக்கதையில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது, இந்த படத்தை இயக்கவிருப்பது யார் என்பது தெரியவில்லை.

You May Also Like