உங்க மனைவிக்கு தமிழ் தெரியாதா?.. கேள்வி கேட்ட கஸ்தூரி.. ரகுமானின் சிம்பிள் பதில் – ஆனா நெட்டிசன்கள் கொதிச்சுட்டாங்க!

கடந்த 1983ம் ஆண்டு முதல் சுமார் 40 ஆண்டுகளாக தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை அமைத்து அதில் ராஜாவாக வாழ்ந்து வரும் ஒரு இசை மேதை தான் ஏ.ஆர் ரகுமான். 80களின் இறுதியில், இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இசைஞானியின் ஆதிக்கமே தமிழ் சினிமா உலகை ஆண்டு வந்த நிலையில் மெல்லிய சாரலாய் பெய்த மழைத்துளி தான் இன்று இசை புயலாக உருவெடுத்துள்ள ரகுமான்.
தற்போது இவருடைய இசையில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன், மிக பிரம்மாண்டமான அளவில் திரையரங்குகளில் ஓடி வருகிறது இந்த படம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரகுமான், அங்கே பேச வந்த தனது மனைவி சைரா பானுவிடம், நீங்கள் ஹிந்தியில் பேச வேண்டாம், தமிழில் பேசுங்கள் என்று கூறினார்.
இது பொதுவாக ரகுமான் கூறும் ஒரு வார்த்தை தான் என்றாலும் கூட அது மிகப்பெரிய விவாத பொருளாக தற்போது மாறியுள்ளது. பேசும் மொழி என்பது ஒருவருக்கான தனி உரிமை, கணவராக இருந்தாலும் அவர் அப்படி பேசக்கூடாது என்று கூறிவருகின்றனர் சிலர்.
மேலும் நடிகை கஸ்தூரி “ரகுமான் மனைவிக்கு தமிழ் வராதா, அவங்க தாய்மொழி என்ன? வீட்ல குடும்பத்தில் என்ன பேசுவாங்க? என்று கேள்வி எழுப்ப அதற்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்கும் வகையில் “காதலுக்கு மரியாதை” என்று பதில் கூறியுள்ளார் ரகுமான்.
இருப்பினும் இதை பார்த்த நெட்டிசன்கள், அவர் என்ன மொழி பேசினால் உங்களுக்கு என்ன? அது அவருக்கும் அவர் கணவர் ரகுமானுக்குமான தனிப்பட்ட ஒரு உரிமை. அதில் கேள்வி கேட்க உங்களுக்கு எந்த வகையிலும் உரிமை இல்லை என்று கூறி கமெண்ட் செக்ஷனில் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.