Search
Search

படமாகுமா சிந்துவெளி நாகரிகத்தின் வரலாறு?.. வைரலாகும் ராஜமௌலியின் ட்வீட்!

உண்மையில் இதிகாசங்கள் சம்பந்தமான திரைப்படங்களை மிக மிக பிரம்மாண்டமாக உருவாக்குவதில் பெயர் பெற்றவர் தான் ஸ்டார் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி. மகதீரா தொடங்கி RRR திரைப்படம் வரை இவர் எடுத்த பல திரைப்படங்கள் இன்றளவும் ஒரு மையில் கற்களாக திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.

குறிப்பாக இவர் இயக்கி வெளியிட்ட பாகுபலி பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரு திரைப்படங்களும் உலக அளவில் வசூலில் பெரிய சாதனைகளை படைத்த திரைப்படங்கள். அதுபோல ஜூனியர் NTR மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான RRR படமும், இந்தியாவை தாண்டி பல வெளிநாடுகளில் இன்றளவும் தொடர் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

நாட்டுக்கூத்து என்ற பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரபல மகேந்திரா நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் மகேந்திரா, சிந்துவெளி நாகரிகம் குறித்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ராஜமௌலி அவர்கள் தொன்மையான இந்த நாகரிகம் குறித்த ஒரு படத்தை எடுத்தால் அது மாபெரும் சாதனையாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில், “ஐயா நான் மகதீரா படத்திற்காக Dholavira என்ற இடத்திற்கு சென்ற பொழுது அங்கு ஒரு மரத்தை பார்த்தேன். அது மிக மிக பழமையான ஒரு மரம், அந்த மரத்தை பார்த்ததும் எனக்கு சிந்துவெளி நாகரிகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் ஆசை தோன்றியது”.

ஆனால் அதற்குப் பிறகு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். தற்பொழுது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு அவர்களை வைத்து ஒரு மாபெரும் பட்ஜெட் திரைப்படத்தை அவர் உருவாக்கி வரும் நிலையில், இந்த படத்திற்கு பிறகு சிந்துவெளி நாகரிகம் குறித்த கதையை அவர் கையில் எடுக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று தற்பொழுது அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

You May Also Like