Search
Search

ரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்

rambutan fruit benefits in tamil

ரம்பூட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. இந்த பழத்தில் கலோரி, வைட்டமின்-சி , இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உள்ளது.

ரம்பூட்டான் (Rambhutan) என்பது இந்தோனேஷிய வார்த்தை. இதற்கு முடியடர்ந்த (Hairy) எனப் பொருள்.

ரம்பூட்டான் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாக காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவர்கள் ரம்பூட்டானை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் பருமனைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.

உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் ரம்பூட்டான் பழம் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. ரம்பூட்டான் பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செய்கிறது. கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.

ரம்பூட்டான் பழம் அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்க உதவி செய்கிறது.

இப்பழத்தில் உள்ள இரும்புசத்து உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க செய்கிறது. எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இப்பழத்தில் உள்ளது.

rambutan fruit benefits in tamil

ரம்பூட்டான் பழத்தின் தோல் பகுதி சீதபேதியைக்(Dysentery) குணப்படுத்தும். ரம்பூட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதை தடுக்கும்.

இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது. என ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

You May Also Like