கேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்

யாஷ் நடித்த KGF Chapter 2 டீஸர் வெளியிடுவதற்கான தேதி நெருங்கி வருவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் KGF Chapter 2 தயாராகி வருகிறது.

இந்நிலையில் கமல் நடித்த ஆளவந்தான் படத்தில் ஜோடியாக நடித்த ரவீனா தாண்டன் கேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து ரவீனா தாண்டன் கூறும்போது “கேஜிஎப் 2 படத்தின் நாயகன் யாஷ் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்த படத்தை எனது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். கேஜிஎப். 2 படத்தில் எனது கதாபாத்திரம் மிக வித்தியாசமானது. சக்திவாய்ந்தது, சிக்கலானதும் கூட. ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறேனா என்பதை திரைப்படத்தில் பார்த்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும். கேஜிஎப். முதல் பாகத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினேன். அந்த படம் முற்றிலுமாக என்னை ஆட்கொண்டுவிட்டது” என்று கூறியுள்ளார்.

Advertisement

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.