“கிட்டத்தட்ட எல்லாம் ரெடி”.. சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படம் – ஓகே சொல்லிவிட்டாரா தளபதி?

சூப்பர் குட் ஃபிலிம்ஸ், நிச்சயம் 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் தான் இது. பிரபல நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் அவர்களின் தந்தையான ஆர்.பி சௌத்ரி அவர்களால் 1988ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு பட தயாரிப்பு நிறுவனம் தான் இது.
முதலில் மலையாள திரைப்படங்களை தயாரித்து வந்த இந்த நிறுவனம், முதன்முதலில் 1990ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலை கண்ட “புது வசந்தம்” என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது.
அதனை தொடர்ந்து இன்று வரை பல்வேறு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்டு வருகிறது. இறுதியாக “அனுமன் கியர்” என்ற மலையாள திரைப்படத்தை இந்த 2023ம் ஆண்டு அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கேப்டன், நாட்டாமை, சுந்தர புருஷன் மற்றும் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் முதன் முதலில் தளபதி விஜய் அவர்களுடைய “பூவே உனக்காக” திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்த நிறுவனத்தின் 85வது திரைப்படம், தளபதி விஜய் நடிப்பில் வெளியான “ஜில்லா” என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் 100வது திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும்.
ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் அவர்களுடைய தந்தையுடன் இணைந்து இந்த படத்தை இயக்க பல நல்ல இயக்குநர்களிடம் கதையை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.