அட என்ன அண்ணே ஆச்சு உங்களுக்கு? – அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரோபோ சங்கர்
ஊர் திருவிழாகளில் நடைபெறும் மேடை நாடகங்களில் நடித்து, அதன் பிறகு சின்னத்திரைக்கு உயர்ந்து, பின் வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களுடைய எண்ணிக்கை மிக மிக குறைவு என்றே கூறலாம். அந்த வகையில் மேடை நாடகங்களில் உடல் முழுக்க பெயிண்ட் பூசிக்கொண்டு ரோபோவாக நடித்து.
அதன் பிறகு ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று ஜெயித்து, பின் சின்னத்திரையில் நுழைந்து, தற்பொழுது வெள்ளி திரையில் பல சூப்பர் ஹிட் ஹீரோகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் ஒரு நடிகர் தான் ரோபோ சங்கர். உண்மையில் சாமானியனும் ஆசையும், கனவும் இருந்தால் தங்கள் லட்சியத்தை அடைந்து விடலாம் என்பதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருபவர்.
அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் தற்பொழுது நடிப்புத் துறைக்கு வந்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே ரோபோ சங்கரின் உருவத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள அவருடைய ஒரு புகைப்படம் அவருடைய ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கட்டுமஸ்தான உடலோடு, ரோபோ என்ற படத்திற்கு ஏற்ற உடல் வாகோடு இருந்த ரோபோ சங்கர், தற்பொழுது மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். பலர், இவர் அதிகம் மது குடிப்பதால் தான் இந்த உடல் நிலையில் இருக்கிறார் என்று கூறும் நிலையில், ரோபோ சங்கருக்கு என்ன ஆனது என்பது இதுவரை தெரியாமல் உள்ளது.
இருப்பினும் அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் காட்சியளிப்பது அவருடைய ரசிகர்களை சற்று ஆறுதல்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
