ரத்த சோகையை விரட்டும் சக்கரவர்த்தி கீரை

கீரைகளை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியத்தில் குறையிருக்காது. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு மருத்துகுணங்களை கொண்டிருக்கிறது. சில நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் இருந்து வருகிறது. நம் பல கீரைகளின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்திருப்போம். ஆனால் சக்கரவர்த்தி கீரையின் மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரியாத வண்ணமாய் உள்ளது. அதனை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

ரத்த சோகை

சக்கரவர்த்தி கீரையில் அதிகமாக பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துகள் இக்கீரையில் உள்ளது. நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை ஏற்படுகிறது. நம் உணவில் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் ரத்தம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வயிற்றுப்புண்

நம் உட்கொள்ளும் உணவில் அதிகமாக காரம், மசாலா, சேர்த்து சாப்பிடுவதால் அதிக அமில சுரப்பியால் வயிற்றுப்புண் உண்டாகும். இதை அலட்சியப்படுத்தும் போது தான் அல்சராக மாறுகிறது. இதனால் செரிமானக்கோளாறு, போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் நமக்கு வராமல் இருக்க உணவில் சக்கரவர்த்தி கீரையை எடுத்து கொள்ள வேண்டும்.

புற்றுநோய்

இந்தியாவில் பல பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், அதிலிருந்து குணமாக சிலர் செயற்கை மருந்துகளை பயன்படுத்துகின்றனர், ஆனால் கீரை மற்றும் இயற்கை மருந்துகளை பயன்படுத்த பலர் மறுக்கின்றனர். ஆனால் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு கீரை வகைகள் நல்ல மருந்தாக இருந்து வருகிறது. அதிலும் சக்கரவர்த்தி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்கும்.

மூட்டு பிரச்சனை

மூட்டுவலி அதிகரிக்கும் போது செயற்கை மருந்துகள் உடனடியாக வேலை செய்யாது, அப்போது சக்கரவர்த்தி கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக சூடேறியதும் அதை மெல்லிய துணியில் உருண்டையாக்கி இறுக கட்ட வேண்டும். கட்டிய பின் மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு வலி குறையும். மேலும் எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்.

சிறுநீரக பிரச்சனை

உடலில் நீர்ச்சத்து குறைவதால் சிறுநீர் பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனையில் இருந்து குணமாக, சக்கரவர்த்தி கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அதில் நல்லெண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தபின் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை குணமாகும். மேலும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்தாகவும் இருந்து வருகிறது.

தோல் பிரச்சனை

சக்கரவர்த்தி கீரையை நன்கு அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள புண் மற்றும் தழும்புகள் குணமாகும். மேலும் சொறி, சிரங்கு போன்ற தோல் பிரச்சனகள் குணமாகும்.

Recent Post