உப்பு நீரின் பயன்கள் என்ன?

பொதுவாக தண்ணீரை சர்வரோக நிவாரணி என்று அழைப்பார்கள் காரணம், மனிதர்களே இவ்வுலகில் சுத்தத்துடனும் சுகாதாரத்துடன் வாழ இது பெரிதும் உதவுகிறது
தற்போது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் மற்றும் டி.பி என்ற காசநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்
உப்பு நீரைக் கொண்டு தெளித்து அதிலிருந்து வெளிப்படும் வாசனையை சுவாசித்தாலே மேலே கூறப்பட்ட நோய்கள் மனிதர்கள் அருகிலேயே வராது என்பதை கண்டுபிடித்துள்ளனர்

இதற்காக “ஜெட் நெபுலைசர்” என்ன கருவி பயன்படுத்தப்படுகிறது, இந்த கருவி ஒரு ஸ்ப்ரே போன்று செயல்படுவதால் உப்புத்தண்ணீரை சுவாசித்த ஆறு மணி நேரத்திற்குள் 70 சதவிகித நோய்க் கிருமிகள் இறந்து விடுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது
கடந்த 2003-ம் ஆண்டு உலக அளவில் பரவி அனைவரையும் பயமுறுத்திய உயிர் கொல்லி நோயான சார்ஸ் நோயினை உப்புத்தண்ணீர் மூலம் கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.