ஹாரர் காமடி படத்தில் சந்தானம்.. நாளை வரைக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க மக்களே!

கிடைத்த வாய்ப்பு எதையுமே தவறவிடாமல் உழைத்து முன்னேறினால், அது சினிமா மட்டுமல்ல எந்த துறை என்றாலும் உங்களுக்கு வெற்றியே கிட்டும் என்பதை நிரூபித்த பலரில் நடிகர் சந்தானம் அவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய இடம் உண்டு.
சின்னத்திரை நாடகத்தில் நகைப்பூட்டும் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, பல கவுன்டர்கள் போட்டு பெயர் பெற்றரவர் அவர். இந்நிலையில் 2002ம் ஆண்டு வெளியான பேசாத கண்ணும் பேசுமே என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு காதல் அழிவதில்லை மற்றும் அலை ஆகிய இரு படங்களில் நடித்தார் இவை இரண்டுமே சிம்புவின் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2004ம் ஆண்டு மீண்டும் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற மன்மதன் திரைப்படத்தில் பாபி என்ற கதாபாத்திரத்தில் தோன்றி பட்டாசாய் வெடித்து நம்மை மகிழ்வித்தார்.
அதன் பிறகு சச்சின், அன்பே ஆருயிரே, வல்லவன், கிரீடம், பில்லா என்று இவர் ஜோடி போட்டு நடிக்காத தமிழ் நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவருடனும் இணைந்து நடித்து வந்தார். தமிழில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு காமெடியன் என்கின்ற கதாபாத்திரத்தில் இருந்து தாண்டி ஹீரோ என்ற ஸ்தானத்துக்கு உயர்ந்துள்ளார். இந்நிலையில் ஆர்கே என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார்.
இது ஒரு ஹாரர் காமடி படமாக உருவாக உள்ளது, சான்டாவிற்கு இந்த வகை படங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல என்பதை நாம் அறிவோம். நாளை தமிழ் புத்தாண்டு அன்று இந்த படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளது.