முடியின் வளர்ச்சிக்கும் வேர்களுக்கும் ஆரோக்கியம் தரும் சீரக தண்ணீர்

சமையலுக்கு பயன்படுத்தப்படும் சீரகத்தில் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது. நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்தும் சக்தி சீரகத்திற்கு உள்ளது.
சீரகத்தில் கால்சியம், பொட்டாசியம், செலினியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆரோக்கியமான சருமத்திற்கு இந்த சத்துக்கள் உதவுகின்றன.
சீரகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதை இதில் விரிவாகப் பார்ப்போம்.
சீரகத்துடன் இஞ்சி, பெருஞ்சீரகம் சேர்த்து சாப்பிடுவதால் வயிறு உபாதைகள் நீங்கும். மேலும் இது நெஞ்செரிச்சலை சரிசெய்யும்.
சீரகத்தை லேசாக வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெறும்.
சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து மென்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் குமட்டல், அஜீரண கோளாறுகள் ஆகியவை நீங்கும்.
வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
சீரகத் தண்ணீர் இருதயத்தில் தங்கியிருக்கும் சளியை வெளியேற்றும்.
கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற சீரகத்தண்ணீர் பயன்படுகிறது. சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை குணப்படுத்தும்.
மாதவிடாயின் போது ஏற்படும் வலியை போக்க சீரகத்தண்ணீர் பயன்படுகிறது.
சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ முக சுருக்கங்கள் வரவிடாமல் தடுக்கும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.
முடியின் வளர்ச்சிக்கும் வேர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்க சீரகத்தண்ணீர் பயன்படுகிறது.