பெற்றோர் எதிர்ப்பு?.. காதலனை கரம்பிடித்த “ரோஜா நாயகி” பிரியங்கா

வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு நிகராக ரசிகர் கூட்டம் உள்ள நடிகர் நடிகைகள் தான் சின்னத்திரை நடிகர்கள். அந்த வகையில் பிரபல தமிழ் சீரியலான ரோஜா மூலம் புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை தான் ரோஜா என்கின்ற பிரியங்கா.
பிரியங்கா சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தனது காதலரும் தொழிலதிபருமான ராகுல் வர்மாவை தற்போது கரம்பிடித்துள்ளார். பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் இந்த திருமணம் நடந்துள்ளது.
மிக நெருங்கிய நண்பர்களுக்கு மத்தியில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தை பிரியங்கா நல்கரியின் குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் அவர்கள் மலேசியா முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.