“நான் வந்துட்டேன்னு சொல்லு” : முடிவுக்கு வந்த 3 வருட போராட்டம் – சாந்தனுவின் ராவனக் கோட்டம்
தமிழ் சினிமாவை பொருத்தவரை உட்ச நட்சத்திரங்களுடைய வாரிசுகள் சிறந்த நடிகர்களாக உருவெடுப்பது என்பது சற்று சிரமமான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் 1998ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் சாந்தனு பாக்யராஜ்.
இதனை தொடர்ந்து 2008ம் ஆண்டு வெளியான சக்கரகட்டி என்ற படத்தில் அவர் ஹீரோவாக களமிறங்கினார். வசன உச்சரிப்பு, நடனம் என்று பலதரப்பட்ட திறமைகள் இருந்தபோதும் பெரிய அளவில் அவருக்கு திரைப்படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில், தற்போது வெளியாகவிருக்கும் ராவண கோட்டம் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு வெளியான மதயானை கூட்டம் என்ற படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் தான் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020ம் ஆண்டு அவர் ராவணக் கோட்டம் திரைப்படத்தை இயக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் மூன்று வருட கால போராட்டத்திற்கு பிறகு உச்ச நட்சத்திரங்களுடைய திரைப்படங்கள் வெளியாகும் அதே நேரம் சாந்தனுவின் திரைப்படம் வெளியாக இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சாந்தனுக்கு இது ஒரு நல்ல ரீஎண்ட்ரி என்றும் அழைக்கலாம்.
