செங்கல் சூளைக்குள் நடந்தது என்ன? விரைவில் வெளியாகும் சாந்தனுவின் இராவண கோட்டம்!

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் இராவண கோட்டம். கடந்த 2013ம் ஆண்டு பிரபல நடிகர்கள் கதிர் மற்றும் கலையரசன், நடிகை ஓவியாவின் நடிப்பில் வெளியான “மதயானை கூட்டம்” என்ற படத்தை இயக்கியவர் தான் விக்ரம் சுகுமாரன்.
தற்போது ஒரு நீண்ட இடைவெளியை கடந்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் தான் இராவண கோட்டம். இந்த படத்தில் சாந்தனு பாக்கியராஜ், இளைய திலகம், இளவரசு மற்றும் கயல் ஆனந்தி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
கண்ணன் ரவி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் இந்த படத்திற்கான பூஜை துவங்கியது, மற்றும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் துவங்கியது. ஆனால் பெருந்தொற்று பரவலின் காரணமாகவும், அதன் பிறகு ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாகவும் சுமார் 4 ஆண்டுகளாக இந்த படம் வெளிவராமலேயே இருந்தது.
இந்நிலையில் வரும் மே மாதம் 12ம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக இருக்கிறது, மேலும் அவ்வப்போது ட்விட்டர் மற்றும் பிற சமூகவலைத்தளங்களில் இந்த படத்தை குறித்த சில சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் ஒரு ட்விட்டர் பதிவில் “சாந்தனு சகோ, செங்கல் சூளைக்குள் நீங்கள் செய்த சம்பவத்தை நாங்கள் பார்த்துவிட்டோம் என்று கூற, அதற்கு நகைச்சுவையாக “இந்த விஷயத்தை எங்கேயும் லீக் செய்துவிட வேண்டாம் என்று பதில் அளித்துள்ளார் சாந்தனு பாக்யராஜ்.
ஆமா, அப்படி செங்கல் சூளைக்குள் என்னதான் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர். திறமையான நடிப்பு இருந்தும்கூட சாந்தனுவிற்கு இன்னும் ஒரு சரியான பிரேக் கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.
மே 12 வெளியாகும் இராவண கோட்டம் அவருக்கு ஒரு மாபெரும் “கம் பேக்” படமாக இருக்கும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.