எலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை

கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் முறையில் அமரவும்.

உங்களுடைய இரண்டு கைகளிலும் நடு விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும்.

ஆள்காட்டி விரல், மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நீட்டியபடி இருக்கவேண்டும்.

Advertisement

இதனை காலையிலும், மாலையிலும் வெறும் வயிற்றில் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

சூன்ய முத்திரையால் கிடைக்கும் பயன்கள்

கை நடுக்கம், தலைசுற்றல், நரம்பு தளர்ச்சி ஆகியவை நீங்கும். ஆழ்ந்த தூக்கம் தரும் தைராய்டு சுரப்பியின் குறைப்பாட்டால் ஏற்பட்ட சீரற்ற மாதவிடாய் குணமாகும்.

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் காது வலி மற்றும் கழுத்து வலி பிரச்சனைகள் நீங்கும்.

எச்சரிக்கை:

காது கோளாறு உள்ளவர்கள் மட்டும் இதை செய்ய வேண்டும். மற்றவர்கள் செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும். இந்த முத்திரையை செய்யும் போது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டும்.