சில நேரங்களில் சில மனிதர்கள் திரை விமர்சனம்
அசோக் செல்வன் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இதில் நாசர், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா, ரித்விகா, அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை
அசோக் செல்வன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் நடுத்தர இளைஞன். மணிகண்டன் ஒரு ரிசார்ட்டில் ரூம் மேனேஜ்மெண்ட் க்ளீனிங் பொறுப்புகளை செய்து கொண்டிருக்கும் ஏழை இளைஞன். அபிஹாசன் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய முதல் படத்தில் நடித்து அதன் வெளியீட்டுக்காக காத்திருப்பவர். பிரவீன் ஐடியில் வேலை பார்க்கும் திருமணமான இளைஞன், ஆன்சைட்டில் வேலைக்கு செல்ல காத்திருப்பவர்.
இவர்கள் நான்கு பேரின் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக ஒரு விபத்து நடக்கிறது. இந்த விபத்து மூலம் நான்கு மனிதர்களின் வாழ்க்கை எப்படி ஒரு புள்ளியில் இணைகிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் நாசர், அசோக் செல்வன், மணிகண்டன் என அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக மணிகண்டன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அதிர வைக்கிறார்.
பாடல்கள் சுமார் ரகம்தான். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரதனின் பின்னணி இசை மற்றும் மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
உணர்வுப்பூர்வமான படங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த சில நேரங்களில் சில மனிதர்கள் கை கொடுக்கலாம்.
